Police Recruitment

சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் விதி மீறியதாக ரூ.1000 அபராதம்

சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் விதி மீறியதாக ரூ.1000 அபராதம்

தேனி மாவட்டம் போடி மேலதெருவை சேர்ந்தவர் பிரவீன் காந்தி (30). இவர் சொந்தமாக புல்லட் இருசக்கர வாகனம் வைத்துள்ளார். தனது தோட்டத்து விவசாய பணிக்காக இரட்டை வாய்க்கால்-மூணாறு சாலைக்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஹெல்மெட் அணி யாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000 அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த கட்டண ரசீதில் யமஹா வாகனத்தின் படம் இடம் பெற்றிருந்தது. தான் புல்லட் வைத்திருந்த நிலை யில் யமஹா வாகன த்திற்கு அபராதம் என குறிப்பிட்டு தனது விலாசத்திற்கு வந்த கடிதத்தை எடுத்து க்கொண்டு மோட்டார் வாகன ஆய்வாளரிடம் விவரம் கேட்டார். உங்க ளுக்குதான் ரூ.1000 அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கட்ட வேண்டும் என தெரிவித்து ள்ளார்.

இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறுஒரு பைக்கை இட ம்பெற செய்து ஒரு நபருக்கு ரூ.1000 அபராதம் என வந்தது. கூலித்தொழி லாளி யான அவர் தனக்கு விதிக்க ப்பட்ட அபராதத்தை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். போக்குவரத்து காவலர்கள் இதுபோல அஜாக்கிரதையாக ஏதோ ஒரு வாகனத்திற்கு அபரா தத்தை வேறு ஒருவருக்கு அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் தெரி விக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.