Police Recruitment

பாலக்கோடு அருகில் உள்ள கடமடை யில் கோயில் வரி வசூலில் பங்கு கேட்டு தராததால் ஆத்திரம்.
கோயில் நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது.

பாலக்கோடு அருகில் உள்ள கடமடை யில் கோயில் வரி வசூலில் பங்கு கேட்டு தராததால் ஆத்திரம்.
கோயில் நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் ஊர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு கடமடையை சேர்ந்த கோயில் நிர்வாகி முனியப்பன் (வயது .45) கடமடை பகுதியில் உள்ள வீடுகளில் கோயில் வரி வசூல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பசுபதி (வயது. 29) என்ற வாலிபர் வசூலில் எனக்கு பங்கு தா என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்,
கோயில் பணம் தர முடியாது, திருவிழா நேரத்தில் வம்பு செய்ய வேண்டாம் போ என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பசுபதி அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து முனியப்பனை குத்தியுள்ளார்,
முனியப்பன் தடுத்தபோது கன்னாடி பாட்டில் கையில் ஏறி இரத்தம் வழிந்தது,

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முனியப்பனை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.