
எர்ரனஅள்ளி ஏரியில் அனுமதிஇன்றி சட்டவிரோதமாக மண்அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் தினந்தோறும் அனுமதி இன்றி சட்டவிரோதமாக தொடர்ந்து ஏரிகளில் மண் அள்ளி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏரிகளில் மண் அள்ளுவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பாலக்கோடு தாசில்தார் ராஜா இன்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது எர்ரனஅள்ளி ஏரியில் டிப்பர் லாரியில் மண் அள்ளிகொண்டிருந்தனர்.
தாசில்தாரை கண்டதும் லாரி டிரைவர் தப்பியோடி தலைமறைவானார்.
அதனை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்து பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார்.
மேலும் இது குறித்து புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.
