இளைஞர் தினத்தை முன்னிட்டு மானவ மானவியருக்கு போட்டிகள் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு
சர்வதேச இளைஞர் தினம் வருகிற 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மானவ மானவியர்களுக்கு தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ஓவியம், கட்டுரை, மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை மானவ மானவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை விழிப்புணர்வு ஓவியப் போட்டி, பத்தாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன, இந்த அறிவிப்பை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசிமோகன் அவர்கள் தெரிவித்தார்
