
அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கான திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் வருகிற 17-ந்தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு 13.10.2023 அன்று நடத்தப்படும். கடந்த ஜூன் 27, 2003 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் டிசம்பர்-27, 2006 அல்லது அதற்கு முன்னர் பிறந்த வர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப் படையில் 4 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை பணியமர்த்தப் பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது
