கடலூர் புவனகிரி பகுதியில் ஏ.எஸ்.பி திடீர் ஆய்வு மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம்
கடலூர் மாவட்டம் புவனகிரி வெள்ளாற்று பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று அங்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி இந்த பகுதியில் பல்வேறு குற்றசெ யல்கள் நடப்பதாகவும், மது போதையில் வாகனங்கள் ஓட்டி விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் ரோந்து பணிகளை தீவிர படுத்த போலீசாருக்கு உத்தவிட்டார். மேலும் அந்த பகுதி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யவும் கூறினார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தலா 10 ஆயிரம் வீதம் 80 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 நபராக வந்தவர்களை நிறுத்தி கேட்டபோது அதற்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறினார். இருந்தபோதிலும் அவர்களை இதுபோன்று மோட்டார் சைக்கிளில் 3 நபராக செல்லக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.