பாலக்கோடு அப்துல்லா தெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அப்துல்லாதெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா மதரசாயே யூசுபியா அவர்களின் தலைமையில்
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி இனிப்புகளையும், பரிசுகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் 11 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் மசியுல்லா,
ஆசிரியர்கள் , மாணவர்கள், மொஹல்லாஹ் வாசிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.