Police Recruitment

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- தென்காசியில், கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- தென்காசியில், கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை

தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாக லமாக நடைபெற்றது.

கலெக்டர் கொடி ஏற்றினார்

தென்காசி இ.சி.இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

விழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்ட னர். சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published.