Police Recruitment

அவுசிங்போர்டு குடியிருப்பில் நாய் தகராறில் கல்லூரி மானவியை தாக்கிய முன்னாள் இராணுவ வீரர் மற்றும் அவரது மகன் கைது.

அவுசிங்போர்டு குடியிருப்பில் நாய் தகராறில் கல்லூரி மானவியை தாக்கிய முன்னாள் இராணுவ வீரர் மற்றும் அவரது மகன் கைது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கடமடை அவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன் மகள் அறிவுமதி (வயது. 21), தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் முருகன் (62) என்பவரது வளர்ப்பு நாய் குரைத்து கொன்டு துரத்தி சென்றுள்ளது.
இதனால் அறிவுமதியும், அவரது தாய் கோவிந்தம்மாளும் இது குறித்து முருகனிடம் உங்கள் நாய் எங்களை குரைத்து கொண்டு துரத்தி வருகிறது, எனவே நாயை கட்டி வையுங்கள் என கூறியுள்ளனர்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் முருகன் மற்றும் அவரது மகன் மனோஜ் (வயது.32) இருவரும் சேர்ந்து அறிவுமதி, கோவிந்தம்மாளை தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் இன்று பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.