Police Recruitment

கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலி*

கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலி*

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் நேற்று இரவு பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது,
திருவிழாவை தொடர்ந்து இரவு சாமி ஊர்வலம் சென்றது.
ஊர்வலத்தின் போது வைத்த பட்டாசு மினி சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுக்களின் மீது விழுந்ததில், மளமளவென பட்டாசுக்கள் வெடிக்க தொடங்கியது,
பக்தர்கள் பதறி அடித்து ஓடத் துவங்கினர்.
இந்த பட்டாசு விபத்தில் திருழாவை காண வந்திருந்த கருப்பாயிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (21) பரசுராமன் (20 ),யாசிகா (6),பிரதிக்க்ஷா (7), தர்ஷன் (6) உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதிதில் பலத்த காயமடைந்த கருப்பாயி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரின் மகன் விஜயகுமார் (21) சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்,
இவரது பிரேதம் தற்போது பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது ,
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதில் இளைஞர் ஒருவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.