சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும்
திரு.பொன்கார்த்தT.P.S(J2 அடையாறு மாவட்டம் காவல் துறை துணை ஆணையாளர்) அவர்கள் தலைமையில் திரு.M.ரமணிJ5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர்,L&O) அவர்கள் பொறுப்பில் பெசண்ட் நகரில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லம் தேடி சென்று Greeting card h,Sweets,Bouquet கொடுத்து அவர்களை வாழ்த்தியும் மற்றும் காவல் துறை எப்போதும் எந்நேரமும் தாங்களுக்கு துணையாக இருப்போம் என்றும் அன்புடன் பாசத்துடன் மூத்த குடிமக்களை கௌரவப்படுத்தினார்கள்.
ஒரு வீட்டில் தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எதிர்கால சந்ததிகளின் வழிக்காட்டிகளாக பார்க்கப்படுபவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களின் பங்களிப்பு உலகத்திற்கு எவ்வளவும் முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி உலக மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனித சமுதாயத்தில் முதியோர்களின் பங்களிப்பை எடுத்துரைத்து அவர்களைக் கௌரவிக்க வேண்டும் . உடல்நல பிரச்சனைகளாலும் வீட்டில் உள்ளவர்களாலும் அநாதையாக கிடத்தப்படும் முதியவர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே இந்த தினத்தின் மிக முக்கியமான நோக்கமாக பார்க்கப்படுகிறது.