Police Recruitment

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர்தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர்தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பம் அடுத்த சொரத்தங்குழி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாம்பழம்என்ற அசோக்ராமன் (26). இவர் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்து அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார். இவர் கடந்த மாதம் 31-ந் தேதியன்று சொத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பாப்பன் கொள்ளையை சேர்ந்த பழனிவேலிடம் மாமூல் கேட்டு மிரட்டி கொடுக்க மறுத்தவரை கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 1000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தொடர் குற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கலெக்டர் உத்தரவுபடி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.