
எஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக போலீஸ் எஸ்.ஐ.,க்கள் 621, தீயணைப்பு துறை நிலைய அதிகாரிகள் 129 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணிக்கு விண்ணப்பம் செய்த பொது பிரிவு மற்றும் காவல் துறையினருக்கு நேற்றும் இன்றும் மாநிலத்திலுள்ள 33 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு 1.86 லட்சம் பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்
தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணிக்கு 20 தேர்வர்களுக்கு ஒரு சிசிடிவி என பொருத்தப்பட்டு உள்ளது தில்லுமுல்லு செய்வோர் உடனடியாக வெளியேற்ற படுவார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
