
கன்னியாகுமரி மாவட்டம் மார்த் தாண்டத்தில் நகைக்கடையில் பூட்டை உடைத்து 140 பவுன் நகைகளை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார். காவல் நிலையம் அருகே நடந்த இந்த துணிகர சம்பவத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மார்த்தாண்டம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்(45). இவர், ‘சிலங்கா ஜுவல்ஸ்’ என்னும் பெயரில் நாகர் கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். கடையின் பின் புறம் அவரது வீடு உள்ளது.
நகைகள் கொள்ளை
நேற்று முன்தினம் இரவு வியா பாரம் முடிந்ததும் ஜான் கிறிஸ் டோபர் நகைக்கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதி காலை கடையில் இருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அவர் நகைக்கடைக்கு சென்று பார்த்துள் ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்த நபர் கடையின் பின் புறமாக தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அலமாரி களில் வைக்கப்பட்டிருந்த செயின், மோதிரம், வளையல், கம்மல் உள் ளிட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள 140 பவுன் தங்க நகைகளை காண வில்லை. இதுகுறித்து, கடைக்கு அருகே உள்ள, மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஹெல்மெட் கொள்ளையன்
நகைக்கடையில் இருந்த கண் காணிப்பு கேமரா பதிவுகளை போலீ ஸார் ஆய்வு செய்தபோது, ஹெல் மெட் அணிந்த நபர் கடையின் பின்பக்க வாசல் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
அவரை பிடிப்பதற்காக மார்த் தாண்டம் மற்றும் நாகர்கோவில், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ் சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையன் சிக்கவில்லை. தனிப்படை அமைத்து போலீஸார் கொள்ளையனை தேடி வருகின் றனர். காவல் நிலையம் அருகி லேயே நடந்துள்ள இந்த துணிகர சம்பவத்தால் அப்பகுதி வியா பாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.