
வெள்ளி சந்தை 4 ரோட்டில் 10 டன் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் .
3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை 4 ரோட்டில் நடத்திய வாகனச்சோதனையில் அடுத்தடுத்து வந்த 2 மினி சரக்கு பிக்கப் வேனில் 25 மூட்டைகளில் 10 டன் 250 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து பேரில் இருவர் தப்பியோடினர்.
மற்ற 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் தண்டுகாரனள்ளியை சேர்ந்த சம்பத் (வயது.28) அசோக்குமார் (21), மற்றும்
சொன்னம்பட்டியை சேர்ந்த கோகுல்(20) என்பது தெரிய வந்தது,
3 பேரையும் கைது செய்த குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பியோடிய குற்றவாளிகளான காரிமங்கலத்தை சேர்ந்த முருகானந்தம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தனூரை சேர்ந்த கைலாசம் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 10டன் 250 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
