
முல்லாபுதுர் ஓடையில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவர் கைது .
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜக்க சமுத்திரம் – மல்லுப்பட்டி சாலையில் முல்லாபுதுர் அருகே மணல் ஏற்றி வந்த லாரியை தடுத்தி நிறுத்தி டிரைவரிடம் விசாரனை செய்ததில், போயர்சாலை கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது. 36) என்பதும். அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் லாரியின் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது,
மேலும் அனுமதி இன்றி
முல்லாபுதுர் ஓடையில் மணலை திருடி வந்ததாகவும் ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து
டிரைவர் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்
தலைமறைவான லாரி உரிமையாளர் சிவராஜை தேடி வருகின்றனர்.
