மதுரையில் போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது
போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில் மகனும் சிக்கினார்.
மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் வரதராஜன். இவர் மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் புதிய அரசு மருத்துவமனை பின்புறம் நின்று கொண்டு அந்த பகுதியில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்தனர்.
உடனே அந்த பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்களும் தாங்கள் அணிந்து இருந்த ஹெல்மெட்டை கழற்றி, போலீஸ்காரர் மணி கண்டனை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்கச்சென்ற தலைமைக் காவலர் வரதராஜனையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது இருவரும் சிவகங்கை மாவட்டம் சிதலூரை அடுத்த பில்லூரை சேர்ந்த நிறைகுளம் என்பவரது மகன்கள் அண்ணன், தம்பிகளான பிரவீன்குமார் (வயது 27) மற்றும் நவீன்குமார் (24) என்று தெரிய வந்தது. அவர்களை போலீ சார் கைது செய்தனர்.
மதுரை போக்குவரத்து திட்ட பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான்துரை (59). இவரது மகன் ஆரோக் கிய ஜெயமுத்து. இவர் திருமங்கலம் சியோன் நகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார். அவர் பழங்காநத்தம் ஆர்.சி. தெருவில் உள்ள பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களில் தந்தை, மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் மனவருத்தம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மகனை பார்க்க அவர் வேலை செய்யும் பள்ளிக்கு தந்தை சென்றுள்ளார்.
அங்கு தந்தை ஜான் துரையை ஆபாசமாக பேசிய மகன் அவரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஜான்துரை சுப்பிரமணியபுரம் போலீ–சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தையை தாக்கிய மகன் ஆரோக்கிய ஜெயமுத்துவை கைது செய்தனர்.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு போலீஸ்காரர்கள் தாக்கப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.