Police Recruitment

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் காந்திநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தேவராஜ் (வயது 23). இவருக்கும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் கீழக்கருங்காடு பகுதியை சேர்ந்த சிவனேசனின் மகள் நந்தகுமாரி(23) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து இருவரின் பெற்றோர்களையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நந்தகுமாரி, காதல் கணவருடன் செல்வதாக கூறியதையடுத்து, அவரை அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.