மதுரை, மேலூர், கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடிய 7 நபர்கள் கைது
மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் தனியமங்கலத்திலிருந்து சாத்தமங்கலம் செல்லும் ஆத்துக்கால் பகுதியில் சிலர் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாடினார்கள். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் தனியாமங்கலத்தை சேர்ந்தவர்கள் ராஜாராம், முத்துமாறன், வீரமணி, மூவேந்தன், கிருஷ்ணன், முத்துராஜ், மலைச்சாமி என தெரியவந்தது, அவர்களிடமிருந்து சூதாடிய பணம் ரூபாய் 3000/− பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
