Police Recruitment

மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவ உபகரணங்கள் கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது.

மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவ உபகரணங்கள் கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது.

சென்னையைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த M/S Pers Enterprises Pvt Ltd . என்ற நிறுவனத்திற்கு M/S. Associates என்ற நிறுவனத்தைச் சேர்ந்த எதிரி ஸ்ரீதர் என்பவர் Medical Equipments சப்ளை செய்வதாக கூறி வங்கி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.4.50 கோடி வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு எதிரி ஸ்ரீதரன் தனது நண்பரான திரு. காளையப்பன் @ குமார் காளையப்பன் உடன் இணைந்து வாதியின் நிறுவனத்திடம் இருந்து பணத்தைப் பெற்று வாதியின் நிறுவனத்திற்கு எந்தவித Medical Equipments களையும் சப்ளை செய்யாமலும் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
புலன் விசாரணையில் M/S Associates நிறுவனத்தைச் சேர்ந்த எதிரி ஸ்ரீதரன் மற்றும் Kaliyappa Pictures நிறுவனத்தைச் சேர்ந்த எதிரி காளையப்பன் @ குமார் காளையப்பன் ஆகியோர் திட்டமிட்டு புகார்தாரரை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் Medical Equipments வாங்கி தருவதாக கூறி ரூ4,50,00,000./பணத்தை பெற்றுக் கொண்டு Medical Equipments வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியது புலன் விசாரணையில் தெரிய வந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு . சந்தீப் ராய் ரத்தோர்.இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு EDF-1 காவல் உதவி ஆணையாளர் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த 1, திரு .ஸ்ரீதரன்.ஆ/வ 60, த/பெ சாம்பமூர்த்தி No,14 Sun-N-Sand Apartments, 25, 4th Sea Ward Road, Thiruvanmiyur, Chennai -41, என்பவரையும் திரு. குமார் (எ)காளையப்பன் ஆ /வ 56 த/பெ கணபதி என் 8 A/7, ஓம் சக்தி கார்டன், லோட்டஸ் அப்பார்ட்மெண்ட் பின்புறம் திருநகர், பழனி, திண்டுக்கல் மாவட்டம் ஆகியோர்களையும் 01.09.2023 மற்றும் 04.09.2023 -ம் -தேதி கைது செய்து கணம் நடுவர் CCB & CBCID நீதிமன்றம் எழும்பூர் அவர்களிடம் ஆசை படுத்தி நீதிமன்றம் ,உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.