
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்திய காவல் ஆய்வாளர்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பாடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி 12.12.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இப்போட்டியில் 6 பள்ளிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ¸ மாணவியர்கள் மற்றும் குடும்பத்தினர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வருகை தந்து கில்லி நொண்டி, கோலிக்காய், பம்பரம், கயிறு தாவுதல், பாண்டி தாயம், பல்லாங்குழி, ஐந்து கல் ஆகிய நமது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.