Police Department News

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

.

கடந்த 14.12.2019 தேதி T.வாடிப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நாகஜோதி என்பவர் ரூபாய்.3,50,000/- ஐ SBI மற்றும் IOB வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டதாகவும் மேலும் போலியான வேலை நியமன கடிதம் தனக்கு தபாலில் வந்ததாகவும் எனவே தன்னை ஏமாற்றி மோசடி செய்த நாகஜோதி மீது நடவடிக்கை எடுக்கும்படி தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு.தங்கவேல் அவர்கள் பண மோசடி வழக்கு பதிவு செய்தார். இவ்வழக்கை காவல் ஆய்வாளர் திரு.நாகராஜன் அவர்கள் புலன்விசாரணை மேற்கொண்டு நாகஜோதியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.

இது போன்று யாராவது வேலை வாங்கி தருவதாக கூறினால் உடனடியாக மதுரை மாநகர வாட்ஸ் அப் முறையீட்டு எண்ணுக்கு (83000-21100) உடனடியாக தகவல் தெரிவிக்கவும் மேலும் இனிமேல் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.