நாங்க சி.பி.ஐ; உங்க வீட்டை சோதனையிடணும்!’ – பணக்காரர்களைப் பதறவைத்த காட்பாடி இளைஞர்கள்சி.பி.ஐ அதிகாரிகள் என்றுகூறி பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்துவந்ததாக காட்பாடியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில், விருதம்பட்டு காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி லைசென்ஸ் உள்ளிட்ட உரிமங்களைக் கேட்டனர். இளைஞர்கள், நாங்க யார் தெரியுமா; சி.பி.ஐ அதிகாரிகள்; எங்க வண்டியையே மடக்குறீயா’ என்றுகூறி அடையாள அட்டைகளைக் காண்பித்து போலீஸாரை மிரட்டியிருக்கிறார்கள்.பைக்கில்
ஆர்மி’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாலும் அவர்களைப் பார்ப்பதற்கு சி.பி.ஐ அதிகாரிகளைப் போன்று தெரியாததாலும் காவல்துறையினர் சந்தேகமடைந்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதில், விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மதீன் (43), கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (28) ஆகியோர் என்பதும் இருவரும் போலியான சி.பி.ஐ அதிகாரிகள் என்றும் தெரியவந்தது.அவர்களைக் கைதுசெய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்துச்சென்று தங்கள் பாணியில் விசாரணையைத் தொடங்கினர். இதுபற்றி, இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி நம்மிடம் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட மதீன், சதுப்பேரி பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் கேன்டின் வைத்துள்ளார். அவரிடம், ஹரிஹரன் 4 ஆண்டுகளாக வேலை செய்கிறார். இரண்டு பேருமே வசதியானவர்களிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டனர்.வாட்டசாட்டமாக இருப்பதால், தங்களை ஐ.பி.எஸ் ஆபீஸர் என்றுகூறிக் காவல் சீருடையில் இருப்பதைப்போன்ற படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், சி.பி.ஐ-யில் ஹரிஹரன் உதவி ஆணையராகவும் மதீன் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். மிடுக்கான தோற்றத்துடன் பணக்காரர்கள் தொழிலதிபர்களின் வீடுகளுக்கு ரெய்டுக்குச் சென்றுள்ளனர்.இவர்களை சி.பி.ஐ அதிகாரிகள் என்று நம்பி பலரும் பயந்துபோய் பணம் கொடுத்து அனுப்பியுள்ளனர். சமீபத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் சென்ற வாகனத்தை மடக்கி உரிமங்களைக் கேட்டபோது அவரையே மிரட்டியிருக்கிறார்கள். சி.பி.ஐ அதிகாரிகள் என்று போலியாக தயாரித்துவைத்திருந்த அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர்களின் பின்னால் இன்னும் சிலர் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.விருதம்பட்டு பகுதியில் இரண்டு பேரும் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தியதில் காவல் சீருடைகள், ரூ.4.70 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளோம். அதைத்தவிர, முக்கிய ஆவணங்களும் சிக்கியிருக்கின்றன. கார், பைக் என வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்து வந்துள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யாரென்றும் விசாரணை நடத்திவருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்