Police Recruitment

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

ஆலங்குளத்தை அடுத்த கீழே வீராணம் மேட்டுப் பட்டி தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிதா (வயது 24) என்ற பெண்ணு டன் திருமணம் ஆனது.
கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் அமுதாபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது அனிதா வுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஊத்து மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.