Police Recruitment

குற்ற விசாரணை முறை சட்டமா? குற்ற விசாரணை முறை விதியா? சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்

குற்ற விசாரணை முறை சட்டமா? குற்ற விசாரணை முறை விதியா? சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்

ஒருவர் எந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக கருதினாலும் அதற்காக நடவடிக்கையெடுக்க பயன்படுவதுதான் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள குற்ற விசாரணை முறை விதிகள் 1973, இதில் 1973 என்பது அது இயற்றப்பட்ட ஆண்டை குறிக்கும். சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் என்பது அவ்வளவு எளிதாக நீதிதுறை சார்ந்தவர்களுக்கு கூட தெரியவில்லை
சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்றும் விதிகளை அறிந்தவன் வில்லங்கமானவன் என்றும் சமுதாயம் பார்கின்ற நிலைக்கு சட்டத்தை பயன்படுத்தியவர்கள் தவறாக பயன்படுத்தி விட்டார்கள் உண்மையில் சண்டை போடவா சட்டம்?
நாட்டில் நடக்கும் செயல்கள் அனைத்தும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சட்டம் இதன் நோக்கத்திற்காக சட்டம் என்பது எதை எதையெல்லாம் செய்யக்கூடாது எதை எதை எல்லாம் செய்ய வேண்டும் இதை செய்வதால் அல்லது செய்யாமல் இருப்பதால் அது எந்த விதத்தில் குற்றமாகும் என விளக்கம் தருவதுடன் அதற்கு என்ன தண்டனை என சொல்லுவது ஆகும் இப்படி செய்யப்பட்டதாக செயல் குற்றமா? தண்டனைக்குறியதா? என்பதை விசாரணை செய்வதற்காக. அதாவது புகாரை பதிவு செய்தல் சாட்சிகளை விசாரித்தல் குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் விடுவித்தல் தண்டனை கொடுத்தல் அல்லது விடுதலை செய்தல் போன்ற பல வேறான செய்கைகளை செய்ய ஏற்படுத்ப்பட்டதுதான் விதிகள்.

இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் சட்டம் என்பது நமது உடம்பு இந்த உடம்பு வேலை செய்ய வேண்டுமென்றால் ஐம்புலன்கள் உட்பட அனைத்து உருப்புகளும் தேவையல்லவா? அதுதான் விதி.

உடம்பு இயங்குவதற்கு எப்படி உருப்புகள் தேவையோ அதே போல் தான் சட்டத்தை செயல்படுத்த விதிகள் தேவை. எனவே உடம்பில் உள்ள உருப்புகளை எப்படி உடம்பு என்று சொல்லக்கூடாதோ அதே போல்தான் விதிகளை சட்டம் என்று சொல்லக்கூடாது. இதன் அடிப்படையில்தான் நாம் குற்ற விசாரணை முறை விதிகள் என்று கூறுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.