மதுரையில் மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 253 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் மாயமான 253 செல்போன்களும் மீட்கப்பட்டன.
இதில் கோவில் சரகத்தில் 12, தெற்கு வாசல் சரகத்தில் 13, திடீர் நகர் சரகத்தில் 73, திலகர் திடல் சரகத்தில் 5, அவனியாபுரம் சரகத்தில் 87, செல்லூர் சரகத்தில் 17, அண்ணாநகர் சரகத்தில் 31 செல்போன்களும் அடங்கும். மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் இன்று காலை ஒப்ப டைக்கப்பட்டது.