முதல் தகவல் அறிக்கை புகார்தாருக்கு இலவசமாக கொடுப்பது போல் எதிரிக்கும் கொடுக்க வேண்டுமா?
குற்ற விசாரணை முறை விதி 154 ன்படி எந்த காவல் நிலையத்திலும் உங்கள் புகாரை கொடுக்கலாம். அதாவது அந்த காவல் நிலையத்திற்கு அதிகார வரம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை அதிகார வரம்பு இல்லையென்றாலும் கூட புகாரை பதிவு செய்து அதிகார வரம்புள்ள காவல் நிலைய விசாரணைக்கு அதை மாற்றி விட வேண்டியது காவல் நிலை ஆணைகள் பிரிவு 559-ன்படி புகாரை பதிவு செய்யும் காவல் நிலையத்தின் பொறுப்பாகும்
குற்ற விசாரணை முறை விதி 154 என்பதுகடுமையான குற்றங்களுக்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதற்கானவிதியாகும் இப்படி கொடுக்கப்படும் புகாரை உதவி ஆய்வாளர் நிலைக்கு குறையாத ஒரு காவல் அலுவலர்தான் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
உதவி ஆய்வாளர் பணி நிமித்தமாகவோ அல்லது சொந்தப்பணி காரணமாகவோ விடுப்பில் இருக்கும் போது அவரின் அதிகாரம் பெற்ற வேறு காவல் அலுவலர் புகாரை பதிவு செய்ய வேண்டும் அத்துடன் கு.வி.மு.வி.154(2)-இன்படி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்றை இலவசமாக புகார் கொடுத்த நபருக்கு கொடுக்க வேண்டும் எதிர்தரப்பினருக்கு கொடுப்பது பற்றி எந்த விதியும் இல்லை இது சரியல்ல.
எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்ற விபரத்தை ஒருவர் தெரிந்து கொள்ள இந்திய சாசன கோட்பாடு 22(1)-இன் படி அடிப்படை உரிமை இருக்கும் போது முதல் தகவல் அறிக்கையின் நகலை இலவசமாகவே தந்தாகத்தானே வேண்டும் எது எப்படி இருப்பினும் இது குறித்த விதியை கு.வி.மு.வி.யின் 154-இன் கீழேயே சேர்பது கட்டாயமாகும்.