Police Department News

மதுரையில் பார்வர்டுபிளாக் தெற்கு மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை

மதுரையில் பார்வர்டுபிளாக் தெற்கு மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை

மதுரை மேலூர் காவல் நிலைய சரகதிற்கு உட்பட்ட வெள்ளரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமாரன் இவர் பார்வர்டு பிளாக் மதுரை தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். சம்பவதன்று, இவர் ஊருக்கு வெளியே உள்ள அவரது நெல் வயல் பகுதியில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை முன்பு இரவு தூங்கினார். அப்போது இரவில் ஒரு மணியளவில் ஒரு கும்பலால் முத்துகுமரன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார், இது குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் மற்றும் மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா அவர்கள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர் அதன் பின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர், விசாரணையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜய்சுந்தர், மற்றும் யாகப்பநகரை சேர்ந்த மாரிமுத்து , மதுரை ஆலந்தூரை சேர்ந்த அறிவரசன், மற்றும் நெளியேந்தல்பட்டியை செர்ந்த பாபு ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரியவந்தது, மேற்படி நான்கு பேரையும் பிடித்து விசாரித்த போது, கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டதையடுத்து, காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதி மன்றத்தின் உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

செய்திகள் தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநில செய்தியாளர்
மதுரை

Leave a Reply

Your email address will not be published.