அரசு அலுவலங்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது
பொதுவாக குற்றத்தொடர்பான புகார்களை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டுமென்று நினைபீர்கள் உண்மை அதுவல்ல காவல் நிலையத்தில் மட்டுமேதான் புகார் கொடுக்க வேண்டுமென்று எந்த சட்டமும் விதியும் சொல்லவில்லை.
காவல் நிலையத்திற்கு மட்டுமல்லாது நீங்கள் எந்த மனுவை யாருக்கெழுதினாலும் சட்டப்பிரிவு போட்டு எழுத வேண்டும் அப்போதுதான் நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்பதை சட்ட விளக்கத்தோடு புரிந்து கொண்டு மனுவை பெறுபவர்களும் அதற்கு தக்கவாறு செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பிரிவை குறிப்பிட்டு எழுதுவது. இது சட்டப்படி முறையானதும் கூட.