
மதுரையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரையில் விளக்கு தூண் பகுதியிலிருந்து சுமார் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டது.
முன்னதாக இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் சிறப்புரையாற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தை முன்னிட்டு மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வினாயகர் சிலை வைகையாற்றில் கரைப்பு நிகழ்வு போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது
