
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை மத்திய சிறையில் பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா தமிழக சிறைப்பணி என்.ஜி.ஓ. நிறுவனத்தின் மூலமாக சமீபத்தில் மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை சிறைவாசியாக இருந்து விடுதலையான 2 நபர்களுக்கு அவர்கள் சிறையில் செய்து வந்த பணியின் அடிப்படையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.
அதன்படி அவர்கள் தொழில் செய்யும் வகையில் சலவை பெட்டி மற்றும் தள்ளுவண்டி, இனிப்பகம் நடத்துவதற்கு தேவையான அடுப்பு மற்றும் பாத்திரங்கள் அடங்கிய ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மதுரை சரக சிறை துறை துணை தலைவர் பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு பரசுராமன் ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய சிறைப் பணிகள் நிறுவனத்தின் தமிழக மாநிலச் செயலாளர் ஜேசு ராஜ் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனிடிக்ஸ் ஆகியோர் வழங்கினர்.
