சொத்துபிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது
முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது தம்பி அய்யாதுரை என்பவருக்கும் சொத்துப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 18.06.2021 அன்று இரவு ஆறுமுகம் வீட்டிற்கு அருகே வைத்து அய்யாதுரை, அவரது மகன் மாலையப்பன், மற்றும் சேது வயது 28, ஆகியோர் ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் ஐயப்பன் வயது 27 முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் விசாரணை மேற்கொண்டு ஆறுமுகத்தை தாக்கிய அய்யாதுரை,மற்றும் சேதுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.