இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் மன்னார் வளைகுடாவில் உள்ள மனோலி தீவில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது அந்தத் தீவை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்திருப்பதாகவும் அதை வாங்கிவந்து தந்தால் குறிப்பிட்ட தொகை தருவதாகவும் சுந்திரமுடையான் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் கடந்த மாதம் 11-ம் தேதி தலைமன்னார் கடற்பகுதிக்குச் சென்று 2 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கத்தை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளனர்.
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை, உரியவரிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றி அபகரித்துக்கொண்ட கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் போலீஸ் சோதனையின்போது சிக்கினர். அவர்களிடமிருந்து 185 பவுன் நகைகளும் ரூ.10 லட்சமும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.
போலீஸ் இ நியூஸ் இராமநாதபுரம் மாவட்டம் நிருபர்.இராமநாதபுரத்தில் இருந்து காவலர்களின் துணைவன் ஆப்பநாடு முனியசாமி