

விளாத்திகுளம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் பணி நீக்கம், தென்மண்டல I. G உத்தரவு
மதுரை மாவட்டத்தில் உள்ள யா. ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கோமதி வயது 42 என்பவர்,
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தக்கடை மலையாண்டிபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பணியை அலங்கநால்லூரை சேர்ந்த முருகன் என்ற பொறியாளரிடம் மொத்தமாக ஒப்படைத்து உள்ளனர். ஆனால் முருகன் அளவுக்குஅதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த நேரத்தில் கட்டுமான பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளர்.
இதனால் இருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின் மதுரை, யா. ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோமதி 42 வயது என்பவர் புகார் ஒன்றை அளித்தார்.
அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும் கோமதுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார்.
வீட்டைக் கட்டித்தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தமாக 5. லட்சம் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தாக சொல்லப்படுகிறது.
மேலும் கோமதியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்ததாண்டவம் அங்கு கோமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார்.
பணத்தையும் கொடுக்காமல் ,கோமதிக்கு பாலியல் தொல்லையும் அளித்து அவர் மன உளைச்சலுக்கு ஆளானதால் 2 முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார் அவரை அருகிலுள்ளவர்களால் காப்பாற்றப்பட்டதாககோமதி தெரிவித்துள்ளார்.
மேலும் இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம், டி. ஜ. ஜீ, அலுவலகத்தில் புகார்கொடுத்து உள்ளார். மேலும் முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணைய தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாவட்ட ஆட்சியர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையர் என அனைவருக்கும் அஞ்சல் வழியாக புகார் அளித்தார்.
கோமதியின் புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் ஆனந்ததாண்டவத்தை சஸ்பெண்ட்செய்தநெல்லை சரக, டி. ஜ. ஜி, பிரவேஷ்குமார் மற்றும் தென்மண்டல, ஜ. ஜி. அஸ்ராகர்க் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
