
மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி, பாதாள சாக்கடை அடைபை எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது
மதுரையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி பொறியாளர் விஜயகுமார் வயது 52, கைது செய்யப்பட்டார்.
மதுரை மேலப் பொன்னகரம் 3 வது தெருவை சேர்ந்தவர் கனேசன் லேத் பட்டறை நடத்தி வருகிறார் இவரது வீட்டிற்கான பாதாள சாக்கடை செப்டம்பர் 25 ல் அடைப்பு ஏற்பட்டது
வார்டு மாநகராட்சி சுகாதாரப்பிரிவில் நேரில் புகார் தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லை
உதவி பொறியாளர் விஜயகுமாரை அணுகிய போது ஆட்களை கொண்டு அடைப்பை சரி செய்ய. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டார் தர மறுத்த கனேசனிடம் பேரம் பேசி இறுதியாக 10 ஆயிரம் கேட்டார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சத்தியசீலன் அவர்களிடம் புகார் அளித்தார் நேற்று மாலை அலுவலகத்தில் கனேசனிடமிருந்து ரூ. 10 ஆயிரத்தை விஜயகுமார் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் சூரியகல தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
