
கோவையில் வீட்டு முன்பு கோலம் போட்ட பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் கலைவாணி (வயது 65).
இவர் இன்று அதிகாலை உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.
இது குறித்து கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா க்களில் பதிவான காட்சி களை ஆய்வு செய்தனர்.
அதில் அதிகாலை 3.05 மணிக்கு வரும் டிப்டாப் உடை அணிந்து வரும் வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த ஆட்டோவிற்குள் ஏறி அமர்ந்து கொள்கிறார்.
3.40 மணி அளவில் வீட்டு வாசலில் கோலம் போட்ட கலைவாணியிடம் இருந்து செயினை பறித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதனை வைத்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
