



திரு.ஜூலியஸ் கிறிஸ்டோபர் (உதவி ஆணையாளர் போக்குவரத்து அடையாறு மாவட்டம்)அவர்களின் ஒழுங்கு நடவடிக்கை மூலம் OMR சாலையில் ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றி சாலையை சீர்செய்த J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் துறையினர் .
சென்னை OMR பெருங்குடி சர்வீஸ் சாலையிலிருந்து கண்ணகி நகர் சர்வீஸ் சாலை வரை இருசக்கர வாகனம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து அபராதம் விதித்து போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் சென்னை பல்வேறு இடங்களில் நடைப்பெற்றுகொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு ஊர்ந்து செல்லுகின்ற நிலை தற்போது உள்ளது.ஆனால் OMR சாலையில் இரவு பகல் பாராமல் J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் துறையினர் மிகவும் சிறப்பான முறையில் சாலை பணிகளை சீர் செய்து போக்குவரத்து நெரிசலை குறைத்து வாகனங்கள் விரைவாக செல்ல வழிவகுத்துள்ளனர்.
