
மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது
மதுரை மதிச்சியம், வடக்கு தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பேரில், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார்.
அங்கு 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது 8 கிலோ கஞ்சா, 2 அரிவாள்கள், ரூ.11 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் பூந்தமல்லி நகர், கல்யாணசுந்தரம் தெரு, பாலகிருஷ்ணன் திருமங்கலம், ஆலப்பழச்சேரி தெற்கு தெரு சதீஷ் என்ற வெங்கடேஸ்வரன் (32), மானாமதுரை பெருமாள் கோவில் தெரு, வெங்கட்ராமன் மகன் அண்ணாமலை (24), சர்வேயர் காலனி, ஆவின் நகர் மகேஸ்வரன் (40), ஜெய்ஹிந்த்புரம் மல்லிகார்ஜுன் (26), சோலைஅழகுபுரம் காமாட்சி மகன் தினேஷ் (24) என்பது தெரிய வந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை ராஜா மில் ரோட்டில் திலகர் திடல் போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்த முருகன் (39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்
