காரிமங்கலம் அருகே அடுத்தடுத்த இரண்டு கோயில்கள் மற்றும் அரசு பள்ளி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை-தொடர் கொள்ளை சம்பவத்தால் தினறும் போலீசார்
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை பூஜைகள் முடிந்தது வழக்கம்போல் கோயில் அர்ச்சகர் கோயில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.இன்று காலை சென்று பார்த்த போது கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டு பவுன் தங்க நகைகள் திருடு போய் உள்ளன.இதேபோல் அங்குள்ள பச்சையம்மன் கோயிலில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியலில் இருந்த ஏழு பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டுள்ளன.இரண்டு கோயில்களிலும் சேர்ந்து ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் இன்று காலை தெரிய வந்தது.காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு,கோயில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இதேபோல் பெரியாம்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பொருட்கள் திருட்டு
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால் நேற்று பள்ளியின் தனது அறையை பூட்டி விட்டு சென்று விட்டார்.இன்று காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது தன்னுடைய அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கம்ப்யூட்டர் டேட்டா பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டுள்ளன .இந்த பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் முழு தகவலும் இந்த கம்ப்யூட்டர் டேட்டாவில் சேமிக்க வைக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் பொருட்களை திருடி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே நாளில் பெரியாம்பட்டியில் இரண்டு கோயில்கள் மற்றும் அரசு பள்ளியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.