அகரம் சாலை ஓரம் கேட்பாரற்று கிடந்த சொகுசு காரில் 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல் .
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சேலம் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதும் போலீசார் அதை கண்டறிந்து பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில்,
இன்று காலை அகரம் பிரிவு சாலை ஓரம் நீண்ட நேரம் சொகுசு கார் நின்று கொண்டிருப்பதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,
சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார் சொகுசு கார் கேட்பாரற்று இருப்பதை கண்டு சந்தேகமடைந்து காரை திறந்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் 500 கிலோ அளவிலான ஹான்ஸ் , குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
உடனடியாக சொகுசு காருடன் கடத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.