
போலீசார் எச்சரிக்கை அறிவுரை அதிகாலை கோலம் போட வெளியே வர வேண்டாம்
சிவகங்கை. வ.உ.சி. , ரோட்டில் காலை 5.30 மணிக்கு வாசலில் கோலம் போட வந்த மூதாட்டியிடம் டூ வீலரில் வந்தவர்கள் 16 பவுன் நகையை பறித்து தப்பினர். வீரவலசை விலக்கில் அரசு பஸை வழி மறித்து அறிவாளால் கண்டக்டரை மிரட்டி
பணப்பையை பறித்து சென்றனர் வல்லனி ரோட்டில் மூதாட்டியிடம் 8 பவுன் வழிப்பறி என சிவகங்கை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வது அதிகரித்து விட்டது
தொடர் வாகன சோதனை தெருக்களில் சேகரிக்கப்பட்ட சி.சி.டிவி காட்சிகள் மூலம் போலீசார் முதல் கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வீட்டு வாசல் தெரியும் வகையில்தான் பொருத்தியுள்ளனர்.
இதனால் தெருவில் தப்பி செல்லும் வழிப்பறி கும்பல் குறித்து தெரியாமல் போலீசார் திணறுகின்றனர். சம்பவம் நடந்த தெருக்களில் வீடு வீடாக செல்லும் போலீசார் அதிகாலையில் வாசலில் கோலம் போட வர வேண்டாம் நன்கு விடிந்ததும் வாசல் தெளிக்க வந்தால் போதும் என பெண்களிடம் போலீசார் எச்சரித்து வருகின்றனர். மேலும் நம்பர் பிளேட் இல்லாத டூ வீலர்களையை கொள்ளையர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் இதனால் எளிதில் சிக்காமல் தப்பி விடுகின்றனர். எஸ்.பி., பி.கே.அர்விந்த் கூறியதாவது வழிப்பறி கும்பலை பிடிக்க மாவட்ட அளவில் தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் நிச்சயம் பிடிப்போம் என்றார்.
