
தமிழக ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை
தமிழக ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி துவங்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு 1 கிலோ பருப்பு 30 ரூபாயிக்கும் 1 லிட்டர் பாமாயில் 25 ரூபாயிக்கும் 1 கிலோ சக்கரை 25 ரூபாயிக்கும் விற்க்கப்படுகின்றன.இது தவிர கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை சமையலெண்ணை மாவு வகைகள் போன்றவைகளும் விற்க்கப்படுகின்றன.
மொத்தமுள்ள 35,000 ரேஷன் கடைகளில் 33,000 ஐ கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன அந்த சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு உள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் டிஜிட்டல் முறையில் உடனடி பண பரிவர்தனை மேற்கொள்ளும். யுபி.ஐ.எனப்படும் யுனிபைடு பேமண்ட் இன்டர்பேஸ் வசதி இந்தாண்டு ஏப்ரலில் துவங்கப்பட்டது
எனவே முதல் முறையாக ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு ஸ்கேன் வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையில் பணம் செலுத்தும் வசதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 ரேஷன் கடைகளில் மே மாதம் துவங்கப்பட்டது.
ஜூன் முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கப்பட இருந்தது. ஜூன் 2 ல் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தால் தமிழக அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பரிவர்தனை வசதி துவங்கப்படவில்லை பின் ஒருசில மாவட்டங்களில் சில கடைகளில் மட்டும் அந்த வசதி துவங்கப்பட்டது.
தற்போது சென்னையில் 1700 உட்பட பல மாவட்டங்களில் உள்ள 9000 கடைகளில் Paytm செயலி வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம்செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் மக்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து மொபைல் முத்தம்மா என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மொத்தம் உள்ள ரேஷன் கடைகளில் 20000 கடைகளுக்கு ஸ்கேனர் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 9000 கடைகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
