நீதி மன்றம் நீதியின் கோவில் ஆனால் நீதிபதிகள் கடவுள் அல்ல நீதிபதி அறிவுரை
கேரள மாநிலம் ஆலபுழாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்ரண்டிடம் ஒரு மனு கொடுத்தார் அது சம்பந்தமாக விசாரிக்க சென்ற போலீசார் புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்தனர் இந்த பொய் வழக்கை ரத்து செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் நடந்தது அப்போது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் நீதிபதி முன்பு கும்பிட்டபடி நின்றார் இதை கண்ட நீதிபதி நீதியின் கோவிலாக நீதி மன்றம் இருந்த போதிலும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல எனவே நீதிபதியின் முன்பு சாமியை கும்பிடுவது போன்று நிற்க வேண்டியதில்லை என்றார் பின்னர் போலீசார தொடர்ந்த அந்த வழாக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்