மதுரை மாநகரில் வாகனம்,தங்கும் விடுதிகளில் சிறப்பு சோதனை
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் தங்கும் விடுதிகள், மேன்ஷன்களில் சிறப்பு சோதனையினை கடந்த 14.10.1023 வெள்ளிக்கிழமை இரவு முதல் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மேற்கொண்டனர்.
இந்த சிறப்பு சோதனையில் தலைமறைவில் இருந்து தேடப்பட்டு வந்த பழைய குற்றவாளிகள் 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக நடைபெற்ற சோதனையில் 5.249/- கி.கி. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.52,490/- யும், மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகனங்கள் இயக்கியதற்காக 254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.