



மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
.
இன்று (18.10.2023) மதுரை அண்ணாநகர் சரகத்தில் உள்ள கிருஷ்ண ஐயர் மாஹாலில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன், IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 345 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் (வடக்கு) Dr.புக்யா சிநேக பிரியா IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.T.மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
