





பணியின்போது வீர மரணமடைந்த காவல் துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் நீத்தார் நினைவு தினம்
இந்தியா முழுவதும் தங்கள் பணியின்போது நாட்டுக்காக வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர்களை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் அக்டோபர் மாதம் 21-ம் தேதியன்று “நீத்தார் நினைவு தினம்” (Commemoration day) அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு 21.10.2023 இன்று காலை 08.00 மணிக்கு, மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையர் மதுரை மாநகர், காவல்துறை தலைவர் தென்மண்டலம், காவல்துறை துணை தலைவர் மதுரை சரகம், காவல் கண்காணிப்பாளர்- மதுரை மாவட்டம், காவல் துணை ஆணையர் (தெற்கு) மதுரை மாநகர், காவல் துணை ஆணையர் (வடக்கு) மதுரை மாநகர், காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மதுரை மாநகர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) மதுரை மாநகர், சரக உதவி தளபதி ஊர்க்காவல்படை – தென்மண்டலம், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு 01.09.2022 முதல் 31.08.2023 வரை வீரமரணம் அடைந்த 188 இராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
