குற்றதடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்கான இருசக்கர வாகனங்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்கான 63 காவல் இரு சக்கர வாகனங்களில் சைரன், ஒளிரும் விளக்கு, பம்பர், முதலுதவி பெட்டி மற்றும் ஸ்டிக்கர் ஆகியவை புதிதாக பொருத்தப்பட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் வாகனங்கள் ரோந்து அலுவலுக்காக கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்காக வழங்கப்பட்ட 63 காவல் இரு சக்கர வாகனங்களில் புதிதாக சைரன், ஒளிரும் விளக்கு, பம்பர், முதலுதவி பெட்டி மற்றும் ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு மேற்படி வாகனங்கள் ரோந்து அலுவலுக்காக மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் 20.10.2023 இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., அவர்களால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr.பிரதீப் இ.கா.ப., காவல் துணை ஆணையர் (வடக்கு) Dr. புக்ய சிநேகா பிரியா இ.கா.ப., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.மங்களேஸ்வரன் மற்றும் அனைத்து சரக காவல் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.