
வடலூரில் காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
கடலூர்:
வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, வடலூர் நான்கு முனை சந்திப்பில் வாகனம் தணிக்கையில் ஈடுபட்ட போது கடலூரிலிருந்து வடலூர் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசார ணையில் காரை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் யூனியன் காலனி யைச் சேர்ந்த நெடுமாறன் மகன் சர்வேஷ் (23) என்பது தெரிய வந்தது. இவர் 4 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை யொட்டி வழக்கு பதிவுசெய்து சர்வேசை கைது செய்தனர்.
