


பயிற்சி காவலர்களுக்கு காவல் துணை ஆணையர் (தெற்கு) அவர்கள் அறிவுரை
தமிழக காவல்துறையில் காவலராக தேர்வு செய்யப்பட்டு விழுப்புரம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய காவலர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியில் உள்ள பயிற்சிக் காவலர்கள் களப்பணிக்காக மதுரை மாநகர காவல்துறையினருடன் இணைந்து மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களில் (27.10.2023 முதல் 30.10.2023) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். நேற்று மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., அவர்கள் களப்பயிற்சி பெற்ற பயிற்சி காவலர்களை சந்தித்து அவர்களது பயிற்சி அனுபவம் குறித்து கேட்டறிந்தும், அவர்களுக்கு காவல்துறையில் பணிபுரிவது தொடர்பாக தக்க அறிவுரையும் வழங்கினார். இது தொடர்பாக பயிற்சிக் காவலர்கள் கூறுகையில் மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களில் பாதுகாப்புப் பணியில் களப்பயிற்சி பெற்றது தங்களுக்கு நல்ல அனுபவமாகவும், படிப்பினையாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.
