Police Recruitment

புதிய வேகக் கட்டுப்பாடு நாளை முதல் அமல்: பொதுமக்களிடம் காவல்துறை கருத்து கேட்பு

புதிய வேகக் கட்டுப்பாடு நாளை முதல் அமல்: பொதுமக்களிடம் காவல்துறை கருத்து கேட்பு

நாட்டில் 68 சதவீத சாலை விபத்துகளுக்கு வாகனங்களில் அதிவேகமாக செல்வதே காரணம் என மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்து உள்ளது.
இதையடுத்து வேகக் கட்டுப்பாடு விதிமுறைகளை சென்னை காவல் துறை அறிவித்து உள்ளது.
நாளை முதல் சென்னையில் கார், மினிவேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், பஸ், லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு 50 கி.மீ வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம். அதே வேளையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் 30 கி.மீ வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும் என பெருநகர காவல்துறை அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்புக்கு இருக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளும் வகையில் மக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு பக்கத்தில் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
அதில் புதிய வேகக் கட்டுப்பாடு மிக சரியானதா, சரியானதா, மாற்றம் தேவையா என 3 பகுதிகளாக பிரித்து கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. புதிய வேகக் கட்டுப்பாடு 30 சதவீதம் பேர் மிக சரியானதே என்றும், 15.9 சதவீதம் பேர் சரியானதே என்றும் 46 சதவீதம் பேர் மாற்றம் தேவை என்றும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.